படாளம் ஊராட்சியில் கிடப்பில் உள்ள பணிகளை நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும்
வசந்தி ரவி
தமிழகத்தில் புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டதன் காரணமாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடக்காத செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் வரும் செப்டம்பர் 15-ம் தேதிக்குள் ஊரக உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதைத் தொடர்ந்து தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை மாநிலத் தேர்தல் ஆணையம் செய்து வருகிறது.
தேர்தல் அறிவிப்பு எந்த நேரத்திலும் வெளியாகலாம் என்ற நிலையில், ஊராட்சிகளில் பலர் தேர்தலில் போட்டியிட தங்களை தயார் படுத்திக்கொள்ள ஆர்வம் காட்டிவருகின்றனர்.
இதில் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டத்துக்கு உட்பட்ட படாளம் ஊராட்சியில் போட்டியிட வசந்திரவி என்பவர் தற்போது தீவிரமாக ஆர்வம் காட்டி வருகிறார். இதுகுறித்து, வசந்திரவி கூறுகையில், பாலாற்றுக்கரையோரமாக உள்ள படாளம் ஊராட்சியில் படாளம், புலிப்பரக்கோயில், செட்டிமேடு ஆகிய மூன்று முக்கிய கிராமங்கள் உள்ளன அதில்1500 குடும்பங்கள், 3800 வாக்காளர்கள் என மொத்தம் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
பாலாறு அருகிலிருந்தும் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக அடிப்படை வசதியான குடிநீர் பஞ்சத்தை போக்க இதுநாள்வரையில் யாரும் முன்வரவில்லை. மதுராந்தகத்தின் மிகப்பெரிய சர்க்கரை ஆலை படாளம் ஊராட்சியில்தான் உள்ளது. ஆனால் அங்கு உள்ளூர்வாசிகளுக்கு முக்கியத்துவம் தராமல் வெளியூர் பணியாளர்களை மட்டும் வைத்து பணிசெய்து வருகின்றனர். என்னை வெற்றிபெறச்செய்தால் முதலில், தினமும் குடிநீர் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும், சர்க்கரை ஆலையில் உள்ளூர்வாசிகளுக்கு பணி நியமனம் செய்திட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மேலும், கடந்த 30 ஆண்டுகாலமாக வீடுகள் இல்லாமல் சாலையோரங்களிலும், பள்ளிகளிலும் தஞ்சமடைந்துள்ள இருளர் பழங்குடி இன மக்களுக்கு வீடுகளை கட்டித்தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu