திறக்கப்படாத நெல் கொள்முதல் நிலையம்- 'பார்' ஆக மாறும் அவலம்

திறக்கப்படாத நெல் கொள்முதல் நிலையம்-  பார் ஆக மாறும் அவலம்
X
மதுராந்தகம் அருகே, திறக்கப்படாத நெல் கொள்முதல் நிலைய கட்டிடம், மதுப்பிரியர்களின் கூடாரமாகி வருகிறது.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வைப்பணையில், 2 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட நெல் கொள்முதல் நிலையக் கட்டிடம் , 'குடி' மகன்களுக்கு கூடாரமாக மாறி வருவதாக, விவசாயிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

மதுராந்தகம் அடுத்த பெரும்பாக்கம், வைப்பணை, கோழியாளம், தீட்டாளம், பாப்பநல்லூர், வேடந்தாங்கல், கூடப்பாக்கம், உள்ளிட்ட பகுதிகளில், பல ஏக்கர் பரப்பில் விவசாயிகள் நெற்பயிர் சாகுபடி செய்துள்ளனர். அவற்றை கொள்முதல் செய்ய, மதுராந்தகம் அடுத்த வைப்பணை கிராமத்தில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில் நேரடி நெல் கொள்முதல் நிலையம், 2018ஆம் ஆண்டில் கட்டப்பட்டது.

இதன் மதிப்பு சுமார் 35 லட்சம் ஆகும். கட்டிடம் முழுமையாக கட்டி முடிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகியும், இதுவரை திறக்கப்படவில்லை. அந்த இடத்தை மதுப்பிரியர்கள், தங்களின் கூடாரமாக மாற்றி வருகின்றனர். மது அருந்துவது, காலி பாட்டில்களை வீசிவிட்டு செல்கின்றனர்.

எனவே, கட்டப்பட்டுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலைய கட்டிடத்தை, உடனடியாக பயன்பாட்டிற்கு திறக்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்; மதுக்கூடாரமாக அப்பகுதி மாறுவதை தடுக்க வேண்டும் என்று, விவசாயிகளும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
ai in future agriculture