செங்கல்பட்டு: எரிசாராயத்தை கொண்டு போலி மதுபானம் தயாரித்த 2 பேர் கைது!

செங்கல்பட்டு: எரிசாராயத்தை கொண்டு போலி மதுபானம் தயாரித்த 2 பேர் கைது!
X

பறிமுதல் செய்யப்பட்ட போலி மதுபாட்டில்கள், மற்றும் கைதான பெண்கள்

பாண்டிச்சேரியில் இருந்து கடத்தி வரப்பட்ட எரிசாராயத்தை கொண்டு போலி மதுபாட்டில்கள் தயாரித்த 2 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த அச்சிறுப்பாக்கம் அருகே உள்ள உத்தமநல்லூர் கிராமத்தில் பாண்டிச்சேரியில் இருந்து கடத்தி வரப்பட்ட எரிசாராயத்தை கொண்டு கலப்பட மது பாட்டில்கள் தயாரித்து விற்பனை செய்ய இருந்ததை அச்சிறுப்பாக்கம் போலீசார் அதிரடியாக பறிமுதல் செய்தனர்.

போலி மதுபாட்டில்கள் ஒரு லிட்டர் அளவு கொண்ட 52 மது பாட்டில்கள் போலி லேபிள் பாட்டில்கள். நிரப்ப பயன்படுத்திய இயந்திரம் மற்றும் ரொக்கப்பணம் 4 லட்சம் அச்சிறுப்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் சரவணன் தலைமையில் அதிரடியாக மீட்கப்பட்டது.

இது சம்பந்தமாக ரம்யா மற்றும் ராணி அம்மா மகள் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். துரை மற்றும் கண்ணன் ஆகிய இருவரும் தலைமறைக உள்ளனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!