தேர்தல் செலவுக்கு பணம் கேட்டு வாக்கு சேகரிப்பு

தேர்தல் செலவுக்கு பணம் கேட்டு வாக்கு சேகரிப்பு
X
பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் தேர்தல் செலவுக்கு வாக்காளர்களிடம் பணம் கேட்டு வாக்கு சேகரிப்பு

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் (தனி)தொகுதி பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் இளையராஜா செய்யூர் பவுஞ்சூரில் தெருவோர கடை வியாபாரிகள் சிறு வியாபாரிகள், வணிக வளாகம், உள்ளிட்ட பகுதிகளில் தனது ஆதரவாளர்களுடன் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் இளையராஜா வாக்காளர்களை நேரில் சந்தித்து தேர்தல் செலவுக்காக கடை கடையாக உண்டியலில் நிதி திரட்டி வாக்குகள் சேகரித்தார். இதில் அஷ்ரப்அலி, சுஜித், கலைப்பிரியன், ஸ்ரீராம், அருண், பாலா, பூபாலன், ஷபி, சுனில் உள்ளிட்ட திரளான பொதுமக்களும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai solutions for small business