துணை மின் நிலையத்தில் பராமரிப்புபணி: அச்சிறுப்பாக்கத்தில் நாளை மின்தடை

துணை மின் நிலையத்தில் பராமரிப்புபணி: அச்சிறுப்பாக்கத்தில் நாளை மின்தடை
X

கோப்பு படம்

அச்சிறுப்பாக்கம் துணை மின் நிலையத்தில் சிறப்பு பராமரிப்பு பணி நடைபெறுவதால் நாளை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டம் 110/33-11 கிவோ அச்சிறுப்பாக்கம் துணை மின் நிலையத்தில் 11கேவி நகரம் 1அச்சிறுப்பாக்கம் மற்றும் 11கேவி ஒரத்தி மற்றும் 11கேவி சிறுநாகலூர் ஆகிய மூன்று இடங்களில் சிறப்பு பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் புதுப்பேட்டை, வெங்கடேசபுரம், வி.யி.காலனி, பெரும்பேர்கண்டிகை, சிறுபேர்பாண்டி, மின்னல்சித்தாமூர், கரசங்கால், நெடுங்கல், அகிலி, மாத்தூர், சிந்தாமணி, ஆகிய கிராமங்களுக்கு மட்டும் நாளை (26ம் தேதி) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்சாரம் இருக்காது என்று தெரிவிக்கப்படுகிறது. ஆகவே பொதுமக்கள் மின்தடையை ஏற்று ஒத்துழைப்பு நல்குமாறு அச்சிறுப்பாக்கம் மின்சார வாரிய செயற்பொறியாளர் கு.கிறிஸ்டோபர் லீயோ ராஜ், தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!