இறுதி ஊர்வலத்தில் வெடித்த பட்டாசு: 15பேர் படுகாயம் மருத்துவமனையில் அனுமதி
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் திமுக பிரமுகரின் இறுதி ஊர்வலத்தில் வெடித்த பட்டாசு சாலையில் சென்றவர்கள் மீது விழுந்ததால் 15 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மதுராந்தகம் பகுதியில் திமுக பிரமுகர் ஒருவரின் இறுதி ஊர்வலம் நடைபெற்றது. இதில் தேசிய நெடுஞ்சாலையை கடந்துதான் இடுகாட்டிற்கு செல்லவேண்டும். இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது அங்கு குடிபோதையில் இருந்த சிலர் அதிக பட்டாசுகளை சாலையில் வைத்து வெடித்துள்ளனர். அப்போது நாளை முதல் ஊரடங்கு என்பதால் சென்னையிலிருந்து விழுப்புரம் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த வாலிபர் மீது பட்டாசு விழுந்து வெடித்ததில் அவர் வாகனத்துடன் சாலையில் விழுந்து இருசக்கர வாகனம் தீபிடித்து வெடித்துள்ளது.
அதெ சமயம் சாலையில் வந்துகொண்டிருந்த மற்றொரு சரக்கு வாகனம் ஒன்று நிலை தடுமாறி சவ ஊர்வலத்துக்குள் தாறுமாறாக ஓடி மோதியுள்ளது. இதில் வாகன ஓட்டுநர் உட்பட சவ ஊர்வலத்தில் சென்ற 15 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டு மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும் காயமடைந்தவர்களில் மூன்று பேர் கவலைக்கிடமான நிலையில் செங்கல்பட்டு அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகின்றனர். சர்வீஸ் சாலையில் செல்லவேண்டிய சவ ஊர்வலம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று பட்டாசுகளை வெடித்ததே இந்த விபத்துக்கு காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்ட்டி வருகின்றனர். மேலும் இந்த விபத்து குறித்து மதுராந்தகம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu