பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்து சிஐடியு ஆட்டோ ஓட்டுநர் சங்கம் சார்பில் மொட்டையடித்து பிச்சை எடுக்கும் போராட்டம்

பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்து சிஐடியு ஆட்டோ ஓட்டுநர் சங்கம் சார்பில் மொட்டையடித்து பிச்சை எடுக்கும் போராட்டம்
X

மதுராந்தகத்தில் பெட்ரோல், டீசல், விலை உயர்வை கண்டித்து சிஐடியு ஆட்டோ ஓட்டுனர்கள் சங்கத்தினர் பட்டை நாமம் போட்டு, மொட்டையடித்து, பிச்சை எடுத்து போராட்டம் நடத்தினர்.

பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்து சிஐடியு ஆட்டோ ஓட்டுநர் சங்கத்தினர் மொட்டையடித்து பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்தினர்.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் சிஐடியு ஆட்டோ ஓட்டுனர் சங்கம் சார்பில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து, மொட்டையடித்து பட்டை நாமம் போட்டு பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலை உயர்வு கட்டுக்கடங்காமல் உயர்ந்து வரும் நிலையில், இதை கண்டித்து சிஐடியு ஆட்டோ ஓட்டுநர் தொழிற்சங்கம் சார்பில் ஆட்டோ ஓட்டுனர்கள் மொட்டையடித்து பட்டை நாமம் அணிந்து பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் இருசக்கர வாகனங்களை பாடையில் வைத்து ஊர்வலமாக சென்று மதுராந்தகம் பேருந்து நிலையம் அருகில் ஒன்றிய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags

Next Story
ai and business intelligence