விளாங்காடு ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடும் அன்பழகன் தீவிர பிரசாரம்

விளாங்காடு ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடும் அன்பழகன் தீவிர பிரசாரம்

விளாங்காடு ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடும் அன்பழகன்.

செங்கல்பட்டு மாவட்டம் விளாங்காடு ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர் அன்பழகன் தீவர பிரசாரம் செய்து வருகிறார்.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டம் அச்சிறுப்பாக்கம் ஒன்றியம் 114-விளாங்காடு ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடும் பட்டதாரி இளைஞருமான கோட்டைகயப்பாக்கம் கிராமத்தை சார்ந்த ஜி.அன்பழகன் என்பவருக்கு மக்களிடம் பெரும் ஆதரவும் அமோக வரவேற்பும் பெருகிவருகிறது.

இவர் கல்வி சார்ந்த நிகழ்வுகளில் இவர் ஆற்றிவரும் பணிகள், கிராம வளர்ச்சியில் சமூக சேவைகள், அத்துடன் பெரியோர்களின் ஆசிர்வாதமும், தாய்மார்களின் ஆதரவும். இளைஞர்கள் இவர்மீது வைத்துள்ள நம்பிக்கையும் நாளுக்கு நாள் ஆதரவு பெருகிவருகிறது. இவரின் பிரச்சார யுக்தி வீடுதோறும் அமர்ந்து திண்ணை பிரச்சாரம் கூடுதல் பலமாக உள்ளது.

அத்துடன் மக்களிடம் எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் என்று கூறுவதன் மூலம் பழையவர்களை நிராகரியுங்கள் என்று மக்கள் மனதில் ஆழமாக பதியவைக்கிறார்,

விளாங்காடு ஊராட்சியை முன்மாதிரி கிராம ஊராட்சியாக மாற்றி காட்டுவேன் என்று நம்பிக்கையும் வாக்குறுதி தருகிறார். அத்துடன் இவரின் கூடுதல் பலமே, தினமும் இளைஞர்கள் மற்றும் பெரியவர்களிடம் ஆலோசனை செய்து பிரச்சார யுக்தியை மாற்றி வடிவமைக்கிறார். இதனால் நாளுக்கு நாள் மக்களிடம் ஆதரவு பெருகிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Read MoreRead Less
Next Story