அச்சிறுபாக்கம் ஆட்சீஸ்வரர் திருக்கோயில் நடராஜபெருமானுக்கு ஆனித்திருமஞ்சன விழா

அச்சிறுபாக்கம் ஆட்சீஸ்வரர் திருக்கோயில் நடராஜபெருமானுக்கு ஆனித்திருமஞ்சன விழா
X

அச்சிறுபாக்கம் ஆட்சீஸ்வரர் கோயிலில் ஆனிதிருமஞ்சனம் நடைபெற்றது.

அச்சிறுபாக்கம் ஆட்சீஸ்வரர் திருக்கோயில் நடராஜபெருமானுக்கு ஆனித்திருமஞ்சன விழா நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த அச்சிறுபாக்கத்தில் புகழ்பெற்ற தொண்டைநாட்டு சிவஸ்தலங்களில் ஒன்றான ஸ்ரீ ஆட்சீஸ்வரர் திருக்கோயிலில் ஆனித்திருமஞ்சன விழா நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த புகழ்பெற்ற அச்சிறுபாக்கம் ஆட்சீஸ்வரர் திருக்கோவிலில் ஸ்ரீ நடராஜ பெருமானுக்கு வருடத்திற்கு 6 முறை அபிஷேகம் நடைபெறும். இந்த வருடம் ஆனி மாதம் நடைபெறும் திருமஞ்சன விழா மிகவும் விசேஷமானதாகும்.

இவ்விழாவையொட்டி ஸ்ரீ நடராஜ பெருமான் ஸ்ரீ சிவகாமி அம்மனுக்கு மஞ்சள், பால், தயிர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட 21 மூலிகை திரவியங்களால் திருமஞ்சன அபிஷேகம், அலங்காரம், தீப ஆராதனைகள் மூத்த அர்ச்சகர் சங்கர்சிவாச்சாரியார் தலைமையில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதமும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!