வாழ்வாதாரம் இழந்து தவித்தவர்களுக்கு மதுராந்தகம் அமமுகவினர் உதவி

வாழ்வாதாரம் இழந்து தவித்தவர்களுக்கு மதுராந்தகம் அமமுகவினர் உதவி
X

மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அமமுகவினர் நல உதவிகளை வழங்கினர். 

மதுராந்தகம் பகுதி அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில், வாழ்வாதாரம் இழந்து தவித்தவர்களுக்கு நல உதவி வழங்கப்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் நகர அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில், மதுராந்தகம் 19வது வார்டுக்குட்பட்ட மலட்டு குட்டை பகுதியில், நல உதவிகள் வழங்கப்பட்டன. தொடர் மழை காரணமாக வெள்ளநீர் வீடுகளில் புகுந்து, வாழ்வாதாரம் இன்றி தவித்து வந்த அப்பகுதி மக்களுக்கு, -நேரில் சென்று பார்வையிட்ட அமமுக நிர்வாகிகள், பாதிக்கப்பட்ட பொது மக்களிடம் குறைகளை கேட்டறிந்தனர்.

இதனை தொடர்ந்து, அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளர் எம்.கோதண்டபாணி ஆலோசனைப்படி, மதுராந்தகம் நகர செயலாளர் பூக்கடை கே.சி.சரவணன், மற்றும் நகர துணை செயலாளர் விஸ்வா ஆகியோரின் ஏற்பாட்டில், பொதுமக்களுக்கு போர்வை, அரிசி, பிரட், பிஸ்கட், உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வழங்கப்பட்டது. அப்போது நகர அமமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!