மதுபோதையில் ஹோட்டல் உரிமையாளரை தாக்கியோர் கைது

மதுபோதையில் ஹோட்டல் உரிமையாளரை தாக்கியோர் கைது
X

தனியார் ஹோட்டலில் மது போதையில் ஹோட்டல் உரிமையாளரை தாக்கி விட்டு தப்பி செல்ல முயன்ற 14 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அச்சிறுப்பாக்கம் என்ற இடத்தில் சென்னை ஊரப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 14 நபர்கள் பாண்டிச்சேரி கடலூர் பகுதியில் நடைபெற்ற துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வீடு திரும்பும்போது தனியார் ஹோட்டலில் உணவு சாப்பிட்டு விட்டு முழு மது போதையில் பெண் ஊழியர்களிடம் தகராறு செய்து ஹோட்டலை அடித்து நொறுக்கியும் மேலும் ஹோட்டல் உரிமையாளரை தாக்கிய சென்னை ஊரப்பாக்கம் பகுதியை சேர்ந்த பிரகாஷ், ரமேஷ், தமிழ்அரசன், ஆதிராஜ், சுரேஷ், சரவணன், ரஞ்சித்குமார், பிரவீன்குமார், நவீன் ஆகியோர் பின்னர் வேனில் தப்ப முயன்ற போது திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மதுராந்தகம் அய்யனார் கோவில் என்ற இடத்தில் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜ்க்கு தகவல் கொடுக்கப்பட்டு வேனை மடக்கி பிடித்து 14 நபர்களையும் அச்சிறுப்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணனிடம் ஒப்படைத்தனர்.இவர்கள் மீது சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள காவல் நிலையத்தில் கொலை மற்றும் அடிதடி வழக்குகள் உள்ளன. மேலும் 14 நபர்கள் மீதும் அச்சிறுப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!