அச்சிறுப்பாக்கம் தெற்கு ஒன்றியத்தில் அதிமுக வேட்பாளர் மரகதம்குமரவேல் தீவிர பிரச்சாரம்.

அச்சிறுப்பாக்கம் தெற்கு ஒன்றியத்தில் அதிமுக வேட்பாளர் மரகதம்குமரவேல் தீவிர பிரச்சாரம்.
X
அச்சிறுப்பாக்கம் தெற்கு ஒன்றியத்தில் அதிமுக வேட்பாளர் மரகதம்குமரவேல் தீவிர பிரச்சாரம். செய்தார்.

செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் தெற்கு ஒன்றியத்தில் அதிமுக வேட்பாளர் மரகதம் குமரவேல் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். காஞ்சி தெற்கு மாவட்ட தலைவர் மலையூர் புருஷோத்தமன் ஆணைக்கிணங்க தமிழ் மாநில காங்கிரஸ் வட்டார தலைவர் வி.சங்கர் எடையாளம் கிராமத்தில் வேட்பாளர் மரகதம்குமரவேலுவை வரவேற்க பட்டாசு வெடித்து மாலைஅணிவித்து சிறப்பான வரவேற்பு அளித்தார்.

இதில் அச்சிறுப்பாக்கம் தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட எடையாளம் மின்னல், மின்னல்சித்தாமூர், பொறங்கால், அன்னங்கால், ஆனைக்குன்றம், பாபுராயன்பேட்டை, கல்லியகுணம், அம்மனூர்,எலப்பாக்கம் உள்ளிட்ட 15 க்கும் மேற்பட்ட கிராமத்தில் அதிமுக வேட்பாளர் மரகதம்குமரவேல் பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்ததோடு, தேர்தலில் வெற்றி பெற்றவுடன் பொதுமக்களின் குறைகளை தீர்த்து வைப்பதாக வாக்குறுதி அளித்தார்.

இந்நிகழ்வில் தோழமை கட்சியான தமிழ் மாநில காங்கிரஸார் வேட்பாளருடன் ஆரம்பம் முதல் கடைசி வரை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். இதில் புண்ணியமூர்த்தி, யுவராஜ், டில்லி, பாபு, கார்த்தி, உட்பட நிர்வாகிகள் கலந்துகொண்டு சிறப்பான வரவேற்பளித்தனர்.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!