அச்சிறுபாக்கத்தில் அதிமுக வேட்பாளர் இயற்கை காய்கறி வியாபாரிகளிடம் பிரசாரம்

அதிமுக வேட்பாளர் மரகதம்குமரவேல் அச்சிறுபாக்கத்தில் இயற்கை காய்கறி வியாபாரிகளிடம் வாக்கு சேகரித்தார்..

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அதிமுக வேட்பாளர் மரகதம் குமரவேல் அச்சிறுப்பாக்கம் தெற்கு ஒன்றியத்தில் இயற்கை முறை காய்கறி வியாபாரிகளிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பா.ம.க முன்னாள் ஒன்றிய செயலாளர் மின்னல்மூர்த்தி தலைமையில் மரகதம் குமரவேலுவுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

அச்சிறுப்பாக்கம் தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட எடையாளம், மின்னல், மின்னல்சித்தாமூ. பொறங்கால், அன்னங்கால், ஆனைக்குன்றம், பாபுராயன்பேட்டை, கல்லியகுணம், அம்மனூர், அல்லானூர், எலப்பாக்கம், உள்ளிட்ட பகுதிகளில் அச்சிறுப்பாக்கம் தெற்கு ஒன்றிய செயலாளர்கள் அந்தமங்கலம் சுப்பிரமணியன் முன்னிலையில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது மின்னல்சித்தாமூர் பகுதியில் கடந்த சில வருடங்களாக இயங்கி வரும் வார சந்தையை அப்பகுதி வாழ் இயற்கை விவசாயிகளின் நலன் கருதி சந்தைபகுதியை மேம்படுத்தி தருவதாக வாக்குறுதி அளித்தார்.

இதில் மின்னல் கீழ்மின்னல் அதிமுக பொறுப்பாளர்கள் கிளை செயலாளர் அர்ஜுனன், துணை செயலாளர் எஸ்.ஆறுமுகம், ஸ்ரீதர், பொருளாளர் மணிகண்டன்,ப்மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் பொறுப்பாளர்கள் சீனு, ஆறுமுகம், ரவிச்சந்திரன், டி.குமார், வெங்கடேசன்,

சி.ராமலிங்கம், சுபாஷ், சக்திவேல், கணபதி, குட்டி, ஜெய், முன்னாள் மாவட்ட செயலாளர் எடையாளம் கி.குமரவேல், மாவட்ட தேர்தல் பணிக்குழு செயலாளர் அ.வே.பக்கிரிசாமி,

ஆத்தூர் ஒன்றிய செயலாளர் ப.விஜயகுமார், மாணவரணி எடையாளம் அன்பு, ஆகியோர் வேட்பாளருடன் ஆரம்பம் முதல் கடைசி வரை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். இதில் தோழமை கட்சிகள் தொண்டர்கள் உட்பட நிர்வாகிகள் கலந்துகொண்டு சிறப்பான வரவேற்பளித்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!