அச்சிறுப்பாக்கம் ஒன்றியம் 13வது வார்டில் அதிமுகவினர் தீவிர பிரசாரம்

அச்சிறுப்பாக்கம் ஒன்றியம் 13வது வார்டில் அதிமுகவினர் தீவிர பிரசாரம்
X

இரட்டை இலை சின்னத்தில் வாக்கு சேகரித்த, அதிமுக வேட்பாளர் வெளியம்பாக்கம் ஆர்.நித்தியா ரமேஷ்.

அச்சிறுப்பாக்கம் ஒன்றியம் 13வது வார்டு மாவட்ட குழு உறுப்பினர் பதவிக்கு இரட்டை இலை சின்னத்தில் நித்யரமேஷ் தீவிர வாக்கு சேகரித்தார்.

முன்னாள் முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி, மற்றும் முன்னாள் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் ஆதரவுடன், அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 13 -வது வார்டு மாவட்ட குழு உறுப்பினர் பதவிக்கு அதிமுக சார்பில், மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் வெளியம்பாக்கம் ஆர்.நித்தியா ரமேஷ், இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார்.

கோட்டைகயப்பாக்கம், உத்தமநல்லூர், பாபுராயன்பேட்டை, பெரும்பேர்கண்டிகை உள்ளிட்ட ஊராட்சிகளில் வேட்பாளர் நித்யா ரமேஷ், வாக்குறுதிகளை கூறி, தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அவருடன் மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர் கரசங்கால் கே.எஸ்.ரவிச்சந்திரன், முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் தொழுப்பேடு சதாசிவம், ஒன்றிய அம்மா பேரவை பொருளாளர் சிறுபேர்பாண்டி ராஜேந்திரன், கரசங்கால் முன்னாள் ஊராட்சிக்குழு உறுப்பினர் சரவணமூர்த்தி, எடையாளம் செல்லகண்ணு, திம்மாபுரம் மோகன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!