அச்சிறுப்பாக்கம் ஆட்சீஸ்வரர் திருக்கோயில் சித்திரை பிரம்மோற்சவம் தொடங்கியது
ஆட்சீஸ்வரர் திருக்கோயில் சித்திரை பிரம்மோற்சவம் இன்றுகொடியேற்றத்துடன் தொடங்கியது
செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கம் ஸ்ரீ இளங்கிளி அம்மன் உடனுறை ஆட்சீஸ்வரர் திருக்கோயிலில் சித்திரை பிரம்மோற்சவ விழா கொடியேற்றத் துடன் தொடங்கியது.
தொண்டை நாட்டுத் சிவ தலங்களில் ஒன்றான புகழ்பெற்ற ஆட்சீஸ்வரர் திருக்கோயில் செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கத்தில் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலில் 2019ஆம் ஆண்டு பிரம்மோற்சவ விழா நடந்தது. கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் காரணமாக பொது முடக்கத்தால் விழா நடைபெறவில்லை.
இந்த ஆண்டு அரசு விதிமுறைகளின்படி 16ஆம் தேதி இரவு ஸ்ரீ விக்னேஸ்வர உற்சவமும், விழாவின் முதல் நாளான கொடியேற்ற விழா இன்று காலை 7.30 மணிக்கு பஞ்ச மூர்த்திகளான ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ முருகப் பெருமான், ஆட்சீஸ்வரர், இளங்கிளி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகியோருக்கு கோயில் மூத்த அர்ச்சகர் சங்கர் சிவாச்சாரியார் தலைமையில் சிறப்பு அபிஷேக, அலங்கார ஆராதனைகள் நடைபெற்றது.
அதன் பின்னர், கோயிலின் கொடிமரத்தில் 8.45 மணிக்கு சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க கொடி ஏற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து, பஞ்சமூர்த்திகளும் சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன. பஞ்சமூர்த்திகளும் கோயிலின் உட்பிரகாரத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.
விழா எளிமையாகவும் மற்றும் விழாவில் பங்கேற்ற பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து, முக கவசம் அணிந்து பங்கேற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu