அச்சிறுபாக்கம் ஆட்சீஸ்வரர் கோயிலில் திருஞானசம்பந்தர் குருபூஜை விழா

அச்சிறுபாக்கம் ஆட்சீஸ்வரர் கோயிலில் திருஞானசம்பந்தர் குருபூஜை விழா
X

அச்சிறுபாக்கம் ஆட்சீஸ்வரர் கோயிலில் திருஞானசம்பந்தருக்கு குருபூஜை விழா நடைபெற்ற காட்சி.

அச்சிறுபாக்கம் ஆட்சீஸ்வரர் திருக்கோயிலில் திருஞானசம்பந்தர் குருபூஜை விழா நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுபாக்கம் இளங்கிளி அம்மன் உடனுறை ஸ்ரீ ஆட்சீஸ்வரர் திருக்கோயிலில் திருஞானசம்பந்தர் குருபூஜை விழா நடைபெற்றது.

விழாவை முன்னிட்டு ஒவ்வொரு நாளும் ஞானசம்பந்தரின் உற்சவ மூர்த்திக்கு சிறப்பு அபிஷேக அலங்கார, ஆராதனைகள் நடைபெற்றன. விழாவின் இறுதி நாளான வைகாசி மூல நட்சத்திரமான கோயில் சிவாச்சாரியார் சங்கர் தலைமையிலான சிவாச்சாரியார்கள் திருஞானசம்பந்தர் உற்சவ மூர்த்திக்கும், சைவ சமயக் குரவர்கள் நால்வர் மற்றும் 63 நாயன்மார்கள் மூலவருக்கும் சிறப்பு அபிஷேக, அலங்கார ஆராதனைகள் நடத்தினர்.

அச்சிறுபாக்கம் திருத்தலத்தைப் பற்றி திருஞானசம்பந்தர் பாடிய பத்து பாடல்களும் பாடப்பட்டது. அதன் பின்னர், திருநல்லூரில் இறைவனை வணங்கி சித்தி அடைந்ததற்கான பத்து பாடல்களைப் பாடி மோட்ச தீபம் அடைந்த நிகழ்வு பக்தர்கள் அனுமதிக்கப்படாமல் விழா நடைபெற்றது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!