மேல்மருவத்தூர் : டூ வீலர் மீது ஆட்டோ மோதியதில் கல்லூரி மாணவன் பலி

மேல்மருவத்தூர் : டூ வீலர் மீது ஆட்டோ மோதியதில் கல்லூரி மாணவன் பலி
X

சுகன்

மேல்மருவத்தூர் அருகே, இருசக்கர வாகனத்தின் மீது சரக்கு ஆட்டோ மோதிய விபத்தில் கல்லூரி மாணவன் உயிரிழந்தார்.

செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கம் அருகே உள்ள கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த சுகன் என்ற இளைஞர் படாளம் அருகே உள்ள பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இன்று, வழக்கம் போல கல்லூரிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றார்.

மதுராந்தகம் வட்டம், பாக்கம் என்ற இடத்தில், சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தின் மீது, சரக்கு ஆட்டோ மோதி விபத்துக்குள்ளானது. இதில், பலத்த காயமடைந்து, சம்பவ இடத்திலேயே சுகன் உயிரிழந்தார். உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக மதுராந்தகம் அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்து விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!