மதுராந்தகம் பைபாசில் லாரிகள் மோதல் - போக்குவரத்து பாதிப்பு

மதுராந்தகம் பைபாசில் லாரிகள் மோதல் - போக்குவரத்து பாதிப்பு
X
விபத்துக்குள்ளான லாரிகள்.
மதுராந்தகம் புறவழிச்சாலையில் முன்னால் சென்ற கண்டெய்னர் லாரி மீது, டாரஸ் லாரி மோதிய விபத்தால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் தேசிய நெடுஞ்சாலையில் மதுராந்தகம் புறவழிச்சாலையில் சென்னையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற கண்டெயினர் லாரி மீது, பின்னால் வந்த டாரஸ் லாரி மோதியதில் டாரஸ் லாரி முன்பகுதி சேதம் அடைந்து, அதன் ஓட்டுநர் இருவாகனத்திர்க்கு இடையே சிக்கிக்கொண்டார்.

இதனால் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், சுமார் 5 கிலோமீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் சம்பவ இடத்துக்கு வந்த மதுராந்தகம் போலீசார் புறவழி சாலையில் செல்லும் வாகனத்தை மதுராந்தகம் பஜார் வழியாக மாற்று வழியில் வாகனங்களை இயக்கினர்.

இதனால் சுமார் ஒரு மணி நேரம், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினர் ஓட்டுநரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து மதுராந்தகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!