மதுராந்தகம் அருகே வெளிமாநில லாட்டரி சீட்டு விற்பனை : 4 பேர் கைது

மதுராந்தகம் அருகே வெளிமாநில லாட்டரி சீட்டு விற்பனை : 4 பேர் கைது
X

பைல் படம்

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே வெளிமாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

அச்சிறுப்பாக்கம் பகுதியில் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த 4 பேர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள அச்சிறுபாக்கம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தமிழகத்தில் தடை செய்யப்பட்ட கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களை சேர்ந்த லாட்டரி சீட்டுகள் அதிகமாக கள்ளத்தனமாக விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல்கள் வந்தது.

அதன் பேரில் அச்சிறுபாக்கம் காவல்துறையினர் லாட்டரி சீட்டு விற்பனை செய்த ஏகாம்பரம், வெங்கடேசன் மன்னாதி, ராமதாஸ் ஆகிய 4 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்த வெளிமாநில லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்யப்பட்டு, வழக்குப் பதிவு செய்து, சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!