மதுராந்தகம் அருகே மின்சாரம் தாக்கி 35 பன்றிகள் உயிரிழப்பு

மதுராந்தகம் அருகே மின்சாரம் தாக்கி 35 பன்றிகள் உயிரிழப்பு
X

மதுராந்தகம் அருகே மின்சாரம் பன்றிகள் இறந்தன.

மதுராந்தகத்தில் இன்று மேய்ச்சலுக்கு சென்ற 35 பன்றிகள் மின்சாரம் தாக்கி உயிரிழந்தன.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தை சேர்ந்தவர் கங்கா இவர் சுமார் 50க்கும் மேற்பட்ட பன்றிகளை வளர்த்து வருகிறார். இன்று வழக்கம்போல் பன்றிகளை மேய்ச்சலுக்கு அனுப்பினார். இப்படி மேய்ச்சலுக்கு சென்ற பன்றிகள் மீது அப்துல்கலாம் நகரில் உயர் அழுத்த மின்கம்பி அருந்து விழுந்துள்ளது.

மின்சாரம் தாக்கியதில் 35 பன்றிகள் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தன. மின்சாரம் தாக்கியதில் ஒரே இடத்தில் முப்பந்தைந்து பன்றிகள் உயிரிழந்தது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து மதுராந்தகம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
கடம்பூரில் வெடிபொருட்கள் பதுக்கிய 5 பேரை கைது செய்த போலீஸ்!