மதுராந்தகம் அருகே சாலை விபத்து: பெண் குழந்தை உள்பட 3 பேர் பலி: 10 பேர் காயம்

மதுராந்தகம் அருகே  சாலை விபத்து: பெண் குழந்தை உள்பட 3 பேர் பலி: 10 பேர் காயம்
X

மதுராந்தகம் அருகே நேரிட்ட சாலை விபத்தில்  மூன்று பேர் பலியாகினர்

மதுராந்தகம் அருகே லாரியில் வேன் மோதியதில் ஒரு பெண் குழந்தை உள்பட 3 பேர் பலியாகினர் உட்பட 10 பேர்காயம்

செங்கல்பட்டு மாவட்டம், மேல்மருவத்தூர் அருகே சோத்துப்பாக்கத்தில் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த லாரி திடீரென இடதுபுறம் திரும்பியபோது, பின்னால் சென்ற போளிரோ வேன் மோதிய விபத்தில் சென்னை பல்லாவரம் பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தங்கப்பாண்டி (30) வீரன் (60) யாழினி (3) ஆகிய மூவர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

அதே வாகனத்தில் பயணம் செய்த ஆறு பெண்கள் மூன்று ஆண் ஒரு ஆண் குழந்தை உட்பட 10 பேர் படுகாயம் இவர்களை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இவர்கள் அனைவரும் உசிலம்பட்டி குல தெய்வம் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்து விட்டு திரும்பும் போது இந்த விபத்து நடைபெற்றுள்ளது மேலும் இறந்த உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த விபத்து குறித்து மேல்மருவத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்