ஆலப்பாக்கத்தில் 2வது வார்டு மறுவாக்குப்பதிவு : நடுவிரலில் அழியா மை வைப்பு

ஆலப்பாக்கத்தில் 2வது வார்டு மறுவாக்குப்பதிவு : நடுவிரலில் அழியா மை வைப்பு
X

ஆலம்பாக்கம் 2 வது வார்டு உறுப்பினருக்கான தேர்தலில் நடு விரலில் மை வைக்கப்பட்டது.

அச்சிறுப்பாக்கம் ஒன்றியம் ஆலப்பாக்கத்தில் 2,வது வார்டு மறுவாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில் நடுவிரலில் அழியா மை வைக்கப்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஆலப்பாக்கம் ஊராட்சியில் 6 வார்டுகள் உள்ளன. இதில் கடந்த 9 தேதி நடந்த இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் சிற்றூராட்சி 1 வது வார்டு உறுப்பினர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். 2-வது வார்டு உறுப்பினருக்கு தேர்தல் நடைபெற்றது.

1-வது வார்டு வாக்காளர்களுக்கும் 2 வது வார்டு உறுப்பினர் வாக்குச்சீட்டுகளை வழங்கி வாக்குப்பதிவு நடைபெற்றது.இதனை அறிந்த மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் ராகுல்நாத் உத்தரவுப்படி தேர்தல் நிறுத்தப்பட்டது.

அதன் பின்னர் ஆலப்பாக்கம் ஊராட்சியில் 2,வது சிற்றூராட்சி வார்டுக்கான மறு வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. இந்த வார்டில் 2 பேர் போட்டியிடுகின்றனர்.

92 வாக்குகள் உள்ளன. மறுவாக்குப்பதிவு நடைபெறுவதால் நடுவிரலில் மை வைக்கப்பட்டது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!