மதுராந்தகத்தில் 15 குடிசைகள் எரிந்து சாம்பல் : ரூ.10 லட்சம் மதிப்பு பொருட்கள் தீக்கிரை

மதுராந்தகத்தில் 15 குடிசைகள் எரிந்து சாம்பல் : ரூ.10 லட்சம் மதிப்பு பொருட்கள் தீக்கிரை
X

செங்கல்பட்டு மாவட்டம்,மதுராந்தகம் அருகே குடிசை வீடுகளில் ஏற்பட்ட தீயை அணைக்க போராடும் தீயணைப்பு வீரர்கள்.

சிலிண்டரிலிருந்து ஏற்பட்ட கசிவின் காரணமாக 15 குடிசை வீடுகள் தீக்கிரையானது.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே மேலவலம்பேட்டை திருக்கழுக்குன்றம் சாலையில் உள்ள கலைஞர் நகரில் 20க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் உள்ளன. அப்பகுதியின் கடையில் உபயோகத்திலிருந்த சிலிண்டரிலிருந்து மதியம் 1.30 மணி அளவில் கசிவு ஏற்பட்டு தீ பரவியது. இந்த தீ அருகிலுள்ள அடுத்தடுத்த குடிசை வீடுகளில் தீ பற்றியது.

தகவல் அறிந்து அங்கு வந்த தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆனாலும் இந்த தீ விபத்தால் வீடுகளில் இருந்த ரூபாய் 10 லட்சம் மதிப்பிலான நகை பணம் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் முற்றிலும் எரிந்து சாம்பலானது. பொதுமக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்து உரிய நேரத்திற்கு வராததே இந்த தீ விபத்துக்கு காரணம் என பொதுமக்களிடம் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!