அச்சிறுப்பாக்கம் மலைநகரம் லயன்ஸ் சங்கம் சார்பில் 108 மரக்கன்று நடும் விழா
மரக்கன்றுகள் நடும் அச்சிறுபாக்கம் மலைநகரம் லயன்ஸ் சங்கத்தினர்.
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த அச்சிறுபாக்கம் மலைநகரம் லயன்ஸ் சங்கத்தின் சார்பில் சேவை திட்ட பணியாக 108 மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
இவ்விழாவிற்கு சங்கத் தலைவர் என்.மணிவண்ணன் தலைமை தாங்கினார். செயலாளர் வி.சங்கர் வரவேற்றார். அச்சிறுபாக்கம் ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் உள்ள அம்மா கர்ப்பிணி பெண்களுக்கான நடைபயிற்சி பூங்காவில் 108 மரக்கன்று நடுவதை தொடக்கி வைக்கப்பட்டது.
விழாவில் வட்டார மருத்துவ அலுவலர் டாக்கர் சுரேஷ், டாக்டர்கள் ரம்யா, கார்த்திக் லயன்ஸ் மண்டலத் தலைவர் பி.சதாசிவம் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டனர்.
சங்க கௌரவ உறுப்பினர் யோகா தங்கராஜ், துணைத்தலைவர் ஏகாம்பரம், லயன்ஸ் உறுப்பினர்கள் கரன், தனசேகரன், சக்திகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu