வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் பறக்கும்படை சோதனை

வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் பறக்கும்படை சோதனை
X

அதிமுக வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் பறக்கும்படை திடீர் சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தொகுதி அச்சிறுப்பாக்கம் பேரூராட்சிக்குட்பட்ட வெங்கடேசபுரத்தில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடந்தது.இதில் கலந்து கொண்ட வேட்பாளர் மரகதம் குமரவேலுக்கு அவரது கட்சியினர் சிறப்பு வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் அவருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். கூட்டத்தில் சிறப்புரையாற்றிய வேட்பாளர் மரகதம் குமரவேல் அதிமுக அரசின் சாதனைகள் குறித்து எடுத்துரைத்து பொதுமக்களிடையே வாக்கு சேகரித்தார்.

அப்போது அவ்வழியாக சென்ற தேர்தல் பறக்கும் படையினர் கூட்டத்தில் ஏதேனும் பணம் பட்டுவாடா நடைபெறுகிறதா என ஆய்வு செய்ததோடு கட்சியினர் வாகனங்களில் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனைகளால் அப்பகுதியில் சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!