புகைப்பட கலைஞர்கள் பிச்சை எடுக்கும் போராட்டம்

புகைப்பட கலைஞர்கள் பிச்சை எடுக்கும் போராட்டம்
X

மதுராந்தகத்தில் புகைப்பட கலைஞர்கள் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் எதிரே பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டார காஞ்சி தெற்கு மாவட்ட புகைப்பட கலைஞர்கள் சங்கத்தினர் சுமார் 160 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்கள் கொரோனா தொற்று காரணமாக கடந்த ஓராண்டு காலமாக தங்கள் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் இவர்கள் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் தேர்தல் ஆணையம் இப்பகுதி புகைப்பட கலைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என்று கடந்த ஒரு மாத காலத்திற்கு முன்பே மாவட்ட கலெக்டரிடம்,புகைப்பட கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் மனு கொடுக்கப்பட்டிருந்தது.

இப்போது தேர்தல் தேதி அறிவித்த நிலையில் இப்பகுதி புகைப்படக் கலைஞர்களுக்கு வேலை வழங்கப்படவில்லை என்பதை வலியுறுத்தி இன்று மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் எதிரே மதுராந்தகம் வட்டார காஞ்சி தெற்கு மாவட்ட புகைப்பட கலைஞர்கள் சங்கம் சார்பில் வேலை வழங்கக்கோரி 50 க்கும் மேற்பட்ட புகைப்படக் கலைஞர்கள் கையில் தட்டை ஏந்தி பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!