பேருந்து வசதி இல்லாததால் மாணவர்கள் அவதி

பேருந்து வசதி இல்லாததால் மாணவர்கள் அவதி
X

மதுராந்தகம் போக்குவரத்து பணிமனையில் உள்ள 51 பேருந்துகளில் 10 பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுவதால் கிராமப்புற பள்ளி, கல்லூரி மாணவர்கள் பள்ளிக்கு சிரமப்பட்டு வருகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் வேடந்தாங்கல், அச்சிறுப்பாக்கம், எல்.எண்டத்தூர், கருங்குழி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள், மதுராந்தகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படித்து வருகின்றனர். மதுராந்தகத்தில் உள்ள அரசு பேருந்து பணிமனையிலிருந்து பிற கிராமங்களுக்கு இயக்கப்பட்டிருந்த 51 பேருந்துகள் சில ஆண்டுகளுக்கு முன்பு இயக்கப்பட்டன. தற்போது, சாலைகள் பழுதடைந்ததால், இயக்கப்பட்ட 41 பேருந்துகள் நிறுத்தப்பட்டன. மீதமுள்ள 10 பேருந்துகள் மட்டுமே தற்போது இயக்கப்படுகின்றன.பேருந்து வசதி இல்லாததால், கிராம மாணவர்களும், பொது மக்களும் இருசக்கர வாகனங்களில் மட்டுமே, பள்ளிக்கு சென்று வர வேண்டிய சூழ்நிலை உள்ளது. சிலர், இவ்வழியாக விவசாய பணிகளுக்காக செல்லும் டிராக்டர் மற்றும் சரக்கு ஆட்டோக்களில் பள்ளிக்கு மாணவர்கள் ஆபத்தான நிலையில் பயணம் செய்கின்றனர்.

இதேபோல், இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களும் தங்களின் அத்தியாவசிய பணிகள் மற்றும் மருத்துவ சேவைக்காக, மதுராந்தகம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளுக்கு செல்வதற்கு மக்கள் சிரமப்படுகின்றனர். எனவே கிராமபுற மானவர்களின் படிப்பினை கருத்தில் கொண்டும், கிராமங்களில் இருந்து வேலைக்குச் செல்பவர்களின் நிலைமையை கருத்தில் கொண்டும் மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் உடனடியாக பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!