ஆசிரியர்கள் பற்றாக்குறை -மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

ஆசிரியர்கள் பற்றாக்குறை -மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
X

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள லா.எண்டத்தூர் அரசு பள்ளியில் காலியாக உள்ள ஆசிரியர்கள் பணியிடங்களை உடனே நிரப்பிட வலியுறுத்தி மாணவர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்டம், லா.எண்டத்தூர் அரசு பள்ளியில் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு முதல் 600க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். பள்ளியில் தமிழ், வேதியியல், இயற்பியல் உள்ளிட்ட பாடங்களுக்கு ஆசிரியர்கள் இல்லாததால் மாணவர்கள் அவதிப்பட்டு வந்தனர். இந்நிலையில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனே நிரப்பிட வேண்டும், பள்ளியில் அடிப்படை வசதிகளை செய்திட வேண்டும்,10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வாரம் 6 நாட்கள் பள்ளி நடத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் மாவட்ட செயலாளர் தமிழ்பாதி தலைமையில் பள்ளியின் அருகில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து பள்ளி தலைமை ஆசிரியர் மணிவண்ணனுடன் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் இந்திய மாணவர் சங்கம் சார்பில் கல்வி அலுவலகத்தில் கொடுக்கப்பட்ட மனுவின் காரணமாக வேதியியல் மற்றும் இயற்பியல் ஆசிரியர்கள் தற்போது நியமிக்கப்பட்டுள்ளதாகவும் காலியாக உள்ள தமிழாசிரியர் பணியிடத்தை விரைவில் நியமிக்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.மேலும் பள்ளியில் அடிப்படை வசதிகளை உடனடியாக செய்திடவும் வகுப்புகளை வாரநாட்கள் முழுவதும் நடத்தப்படும் என உறுதியளிக்கப்பட்டது.

மாணவர் சங்க மாவட்ட செயலாளா் தமிழ்பாரதி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆனந்தராஜ், கிளை செயலாளர் ஜெயசூர்யா, கிளை துணை செயலாளர் வசந்த் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தையின் போது உடனிருந்தனர். கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றப்படும் என உறுதியளித்ததின் பேரில் போராட்டத்தை முடித்துக் கொண்டு மாணவர்கள் பள்ளி திரும்பினர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!