மதுராந்தகம் அருகே மனைவியை கொலை செய்த கணவன் பலி

மதுராந்தகம் அருகே மனைவியை கொலை செய்த கணவன் பலி
X

செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கத்தில் மனைவியின் தகாத உறவை கண்டித்து மண்ணெண்ணெய் ஊற்றி மனைவியை கொலை செய்த கணவர் தீக்காயத்தால் சிகிச்சை பலனின்றி பலியானார்.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே அச்சிறுப்பாக்கத்தை அடுத்த இரும்புலி கிராமத்தை சேர்ந்த பார்த்திபன். இவரது மனைவி ஜீவாவை நேற்று மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொலை செய்தார். இதில் கணவர் பார்த்திபனும் அவரது மகள் பவித்ரா 75 சதவீதம் தீக்காயம் அடைந்து மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் பார்த்திபன் சிகிச்சை பலனின்றி இன்று பலியானார். இச்சம்பவம் குறித்து அச்சிறுப்பாக்கம் காவல் ஆய்வாளர் சரவணன் தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!