கணவர் தீ வைத்ததில் மனைவி பலி - மகள் படுகாயம்

கணவர் தீ வைத்ததில் மனைவி பலி - மகள் படுகாயம்
X

செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் அருகே மனைவி மீது ஏற்பட்ட சந்தேகத்தில் கணவன் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்ததில் சம்பவ இடத்தில் மனைவி பலியானார்.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தை அடுத்த இரும்புலி ஊராட்சி மேட்டுக்காலனி பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன். இவரது மனைவி ஜீவா. இவரது தகாத உறவை பலமுறை பார்த்திபன் கண்டித்தும் மனைவி ஜீவாவின் நடவடிக்கை சரியில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று அதிகாலை இவர்கள் இருவருக்குள் ஏற்பட்ட தகராறில் வீட்டின் கதவை தாழிட்டு ஜீவா மீது மண்ணெண்ணெய் ஊற்றி பார்த்திபன் தீவைத்து உள்ளார்.

இதில் பார்த்திபன் மற்றும் வீட்டில் தூங்கி கொண்டிருந்த மகள் பவித்ரா ஆகியோர் பலத்த தீக்காயம் அடைந்தனர். மனைவி ஜீவா மட்டும் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியானார். விபத்தில் காயமடைந்த இருவரையும் மீட்டு செங்கல்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து அச்சிறுப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்