கேஸ் சிலிண்டருக்கு பாடை கட்டி ஆர்ப்பாட்டம்

செங்கல்பட்டு அருகே பெட்ரோல், டீசல், எரிவாயு விலை உயர்வை கண்டித்து மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பெட்ரோல், டீசல், எரிவாயு விலை உயர்வை கண்டித்து செங்கல்பட்டு அருகே மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் எரிவாயு சிலிண்டர்களுக்கு பாடை கட்டி முக்கிய சாலை வழியாக தூக்கிச் சென்றும் இருசக்கர வாகனங்களுக்கு மாலை அணிவித்து, கொல்லி சட்டி, பானை உடைத்தும் அஞ்சலி செலுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் டெல்லியில் 80 நாட்களுக்கு மேலாக போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுராந்தகம் வட்டத்தலைவர் வாசுதேவன் தலைமை தாங்கினார். மேலும் அக்கட்சியின் மாவட்ட செயலாளர் சங்கர்,மாவட்ட செயற்குழு உறுப்பினர் மோகனன், மாவட்ட குழு உறுப்பினர் ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu