சினிமா பாணியில் கடத்தப்பட்ட மாணவன் மீட்பு

சினிமா பாணியில் கடத்தப்பட்ட மாணவன் மீட்பு
X

செங்கல்பட்டு மாவட்டத்தில் சென்னையிலிருந்து காரில் கடத்தி வரப்பட்ட பள்ளி மாணவனை அச்சிறுப்பாக்கம் காவல்துறையினர் மீட்டனர்.

சென்னை செங்குன்றம் பகுதியை சேர்ந்தவர் கணேஷ் (18). இவர் தனியார் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இவருடைய சகோதரி ஜமுனா என்பவர் புதுக்கோட்டையை சேர்ந்த பூபதி என்பவரை கடந்த 4 மாதங்களுக்கு முன்பு குடும்பத்தினருக்கு தெரியாமல் செய்து கொண்டார். பூபதியும் ஜமுனாவும் குடும்பத்தினருக்கு தெரியாமல் புதுக்கோட்டையில் தங்கியிருந்தனர். ஜமுனாவின் தந்தை மாரியப்பன் புதுக்கோட்டையில் தங்கியிருந்த தனது மகள் ஜமுனாவை பூபதிக்கு தெரியாமல் சென்னைக்கு அழைத்து வந்துள்ளார்.

இதனால் தனது மனைவியை தனக்கு தெரியாமல் அழைத்துச் சென்றதால் ஆத்திரம் அடைந்த பூபதி தன் மனைவியை அடைந்தாக வேண்டும் என்கின்ற நோக்கத்தில் இன்று தனது நண்பர்களான மணிகண்டன், சீனிவாசன், ஆதித்யா, சக்திவேல், சந்தோஷ், குமார், ஆகியோருடன் புதுக்கோட்டையில் இருந்து காரில் சென்று பள்ளியில் இருந்து வீடு திரும்பிய கணேசை வழி மறித்து சினிமா பாணியில் காரில் கடத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

காரில் போதிய இடம் இல்லாததால் கடத்தலுக்கு உடன் வந்த சந்தோஷ்குமாரை அங்கேயே இறக்கி விட்டு 5 பேர் கொண்ட கும்பல் காரில் புறப்பட்டனர். இதை பார்த்த அங்கிருந்த பொதுமக்கள் சந்தோஷ் குமாரை பிடித்து உடனடியாக செங்குன்றம் காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தியதில் ஐந்து பேர் கொண்ட கும்பல் கணேசை காரில் கடத்திக் கொண்டு புதுக்கோட்டைக்கு செல்வதாக அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் செங்குன்றம் போலீசார் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள காவல் நிலையங்களுக்கு தகவல் அளித்துள்ளனர்.

அதன் பேரில் அச்சிறுப்பாக்கம் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆத்தூர் சுங்கச்சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்ட போது சந்தேகத்தின் பேரில் வந்த காரை மடக்கி பிடித்ததில் அதில் கடத்தி வரப்பட்ட கணேஷ் என்ற மாணவனை மீட்டு கடத்தலில் ஈடுபட்ட ஐந்து பேர் மற்றும் அவர்கள் கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் அச்சிறுப்பாக்கம் போலீசார் பறிமுதல் செய்தனர். உடனடியாக செங்குன்றம் காவல்துறையினருக்கு தகவல் அளித்து பிடிபட்ட ஐந்து பேரையும், கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா