கல்குவாரிக்கு எதிர்ப்பு -கிராம மக்கள் சாலை மறியல்

கல்குவாரிக்கு எதிர்ப்பு -கிராம மக்கள் சாலை மறியல்
X

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே கல்குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் கல் குவாரியில் உள்ள லாரிகளை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு இங்கு திறக்கப்பட்ட கல்குவாரியிலிருந்து மண் எடுக்க லாரிகள் வந்தபோது அந்த லாரிகளை தச்சூர் குன்னத்தூர் பேக்கரணை நீலமங்கலம் சீர்வாடி ஆகிய 5 கிராமங்களை சேர்ந்த மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் லாரிகளை சிறைப்பிடித்து கல் குவாரியை முற்றுகையிட்டும் நீலமங்கலம் டூ தச்சூர் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.இப்பகுதியில் அமைக்கப்படும் கல்குவாரியால் பல இன்னல்களை கிராம மக்கள் பெற நேரிடும். ஆகவே இந்த கல் குவாரியை மூட வேண்டுமெனவும்,அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி