மதுராந்தகத்தில் அண்ணா சிலைக்கு மரியாதை

மதுராந்தகத்தில் அண்ணா சிலைக்கு மரியாதை
X

மதுராந்தகத்தில் பேரறிஞர் அண்ணாவின் 52 வது நினைவுநானை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

செங்கல்பட்டு தெற்கு மாவட்டம் மதுராந்தகம் பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா உருவ சிலைக்கு அமமுக சார்பில் செங்கை தெற்கு மாவட்ட செயலாளர் கோதண்டபாணி ஆலோசனைப்படி, மதுராந்தகம் நகர கழக செயலாளர் சரவணன் தலைமையில் அண்ணாவின் 52வது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது சிலைக்கு மலர் தூவி மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

இதில் மதுராந்தகம் நகர அவைத்தலைவர் பாலச்சந்தர், துணை செயலாளர் விஸ்வா, சாமிநாதன், நகர பொருளாளர் ஏழுமலை, இணை செயலாளர் பெருமாள், நகர துணை செயலாளர் சாரதா, நகர இணை செயலாளர் காவேரி, மகளிர் அணி செயலாளர் சத்யா,சாரதா, இளைஞரணி தலைவர் சங்கர், மற்றும் வார்டு செயலாளர்கள், நகர நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்