வீடு கட்ட தோண்டிய பள்ளத்தில் பெருமாள் சிலை கண்டெடுப்பு

வீடு கட்ட தோண்டிய பள்ளத்தில் பெருமாள் சிலை கண்டெடுப்பு
X

மதுராந்தகம் அருகே வீடு கட்ட தோண்டிய பள்ளத்தில் ஆயிரம் ஆண்டு பழமையான பெருமாள் சிலை கண்டெடுக்கப்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள அரசர் கோவில் பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவர் இதே பகுதியில் குடிசை வீடு ஒன்றில் தனது குடும்பத்தாருடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் அதே இடத்தில் பழைய குடிசை வீட்டை மாற்றி புதிய வீடு கட்டுவதற்காக இன்று பள்ளம் தோண்டியுள்ளனர்.

அந்த பள்ளத்தில் இருந்து சுமார் ஆயிரம் ஆண்டு பழமையான 5 அடி உயரமுள்ள கலைநயம் மிக்க பெருமாள் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. அந்த கிராமத்தில் ஆயிரம் ஆண்டுக்கு மேல் மிகவும் பழமை வாய்ந்த வரதராஜ பெருமாள் கோவில் இருந்ததும் இந்த சிலையை கோவிலில் வைத்து வழிபாடு நடத்தி வந்தது, சிலையில் உள்ள குறியீடுகள் மூலமாக தெரிய வருகிறது.இது குறித்து அப்பகுதி மக்கள் வருவாய் மற்றும் அறநிலையத்துறைக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் அங்கு விரைந்த அதிகாரிகள் சிலையை மீட்டு சிலை இவ்விடத்துக்கு வந்ததற்கு என்ன காரணம் என ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
ai solutions for small business