சட்டமன்ற தேர்தலில் கூட்டணி கிடையாது,சீமான்

சட்டமன்ற தேர்தலில் கூட்டணி கிடையாது,சீமான்
X

வரும் சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை என சீமான் கூறினார்.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள பாக்கம் கிராமத்தில் இன்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் பேசும் போது, நாங்கள் ஆண்கள் 117, பெண்கள் 117 என வேட்பாளர்கள் தேர்ந்தெடுத்து தேர்வு செய்து அறிவித்து உள்ளோம். இனி கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை. காலம் கடந்து விட்டது என்றார்.

இரு தலைவர்கள் இல்லாத தேர்தலை எப்படி பார்க்கிறீர்கள் என்ற கேள்விக்கு, இரு தலைவர்களும் உயிருடன் இருக்கும் பொழுதே அவருடன் தேர்தலை சந்தித்து உள்ளோம். தமிழக மக்கள் எங்கள் அரசியல் அவசியம் என எப்போது உண்மையை உணர்கிறார்களோ அப்போது எங்களுக்கு கண்டிப்பாக முழு வாய்ப்பு அளிப்பார்கள் என கூறினார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!