முதியவர் பலி- காரை நாெறுக்கிய உறவினர்கள்

மதுராந்தகம் அருகே சாலையை கடக்க முயன்றவர் மீது அதிவேகமாக சென்ற கார் மோதியதில் முதியவர் உடல் நசுங்கி பலியானார். விபத்து ஏற்படுத்திய காரை உறவினர்கள் அடித்து நொறுக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே மேலவலம்பேட்டையில் இருந்து திருக்கழுக்குன்றம் நோக்கி அதிவேகமாக சென்ற கார் அரையப்பாக்கம் என்ற இடத்தில் சென்ற போது அதே கிராமத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்ற முதியவர் மீது கார் மோதியதில் ராதாகிருஷ்ணன் சம்பவ இடத்தில் பலியானார். இதை அறிந்த ராதாகிருஷ்ணனின் உறவினர்கள் காரை மடக்கி பிடித்து அடித்து நொறுக்கினர். இதனால் அந்த பகுதியில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மதுராந்தகம் போலீசார் இறந்தவர் உடலை கைப்பற்றி விபத்து ஏற்படுத்திய காரையும் பறிமுதல் செய்து காரை ஓட்டிய ஓட்டுநரை கைது செய்து அவர் குடிபோதையில் காரை ஓட்டி விபத்து ஏற்படுத்தினாரா அல்லது கார் ஏதேனும் பழுது காரணமாக விபத்து ஏற்பட்டதா என வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்