மதுராந்தகம் ஒன்றியம் 7 வது வார்டில் 5 முனைப்போட்டி

மதுராந்தகம் ஒன்றியம் 7 வது வார்டில் 5 முனைப்போட்டி
X

ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் குருமூர்த்தி.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஊராட்சி ஒன்றியத்தில் 7வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 5 முனைப்போட்டி நிலவுகிறது.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஊராட்சி ஒன்றியத்தில் 9ம் தேதி ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இதில் 7வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு அதிமுக சார்பில் குருமூர்த்தி, திமுக சார்பில் பரமானந்தம், நாம் தமிழர் கட்சி சார்பில் கருணாகரன், சுயேட்சை வேட்பாளர்களாக ராமச்சந்திரன், உதயா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

மதுராந்தகம் 7 வது வார்டில், அதிமுக, திமுக, நாம் தமிழர் கட்சி ஆகியவை நேரடியாக மோதிக் கொள்கிறது. இதனால் இந்த ஒன்றிய கவுன்சில் பகுதியில் பிரசாரம் சூடு பிடித்துள்ளது.

Tags

Next Story
வீட்டிலே விவசாய கல்வி: Online Agricultural Training மூலம் உங்க Career-ஐ மாத்துங்க!