மதுராந்தகம் ஒன்றியம் 14 வது வார்டில் 4 முனைப்போட்டி

மதுராந்தகம் ஒன்றியம் 14 வது வார்டில் 4 முனைப்போட்டி
X

ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கார்த்திகேயன்.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஊராட்சி ஒன்றியத்தில் 14வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 4 முனைப்போட்டி நிலவுகிறது.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஊராட்சி ஒன்றியத்தில் 9ம் தேதி ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இதில் 14வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு அதிமுக சார்பில் கார்த்திகேயன், திமுக சார்பில் சிவக்குமார், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் கண்ணதாசன், சுயேட்சை வேட்பாளராக வீரபத்திரன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

மதுராந்தகம் 14 வது வார்டில், திமுக, அதிமுக ஆகியவை நேரடியாக மோதிக் கொள்கிறது. இதனால் இந்த ஒன்றிய கவுன்சில் பகுதியில் பிரசாரம் சூடு பிடித்துள்ளது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!