காட்டாங்குளத்தூர் ஒன்றிய கவுன்சிலர் அதிமுக வேட்பாளர் பட்டியல்

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடம் வேட்பாளர் பட்டியலை அதிமுக அறிவித்தது.

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம்24 ஒன்றிய கவுன்சிலர்கள் பதவிகள் உள்ளது. இதற்கான தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை நேற்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டனர்.

அதன்படி 24 ஒன்றிய கவுன்சிலர் இடங்களில் அதிமுக 22 இடங்களில் நேரடியாக போட்டியிடுகிறது. இதில் 9 வது வார்டு, மற்றும் 13வது வார்டு ஆகிய 2 இடங்களை அதிமுக கூட்டணி கட்சிக்கு ஒதுக்கியுள்ளது.

1வது வார்டு பொன்தர்மராஜ், 2வார்டு செங்குட்டுவன், 3வது வார்டு வனஜா துளசி, 4வது வார்டு ஜானகிராமன், 5வது வார் பிரபாகரன், 6வது ஹேமாவதி, 7வது வார்டு ரமணி, 8வது வார்டு கலா சண்முகம், 10வது வார்டு கண்ணப்பன், 11வது வார்டு ரேவதி, 12வது வார்டு மகிளா,

14 வது வார்டு ஷாகீர் பாஷா, 15 வது வார்டு ஈஸ்வரி, 16வது வார்டு செல்வகுமாரி, 17 வது வார்டு கலைவாணி, 18 வது வார்டு ராஜி, 19 வது வார்டு செல்வி, 20 வது வார்டு சரளா, 21 வது வார்டு ராணி, 22வது வார்டு பூரணியம்மாள், 23 வது வார்டு குமாரி, 24 வது வார்டு பொன்னு சாமி, ஆகியோர் அதிமுக வேட்பாளர்களாக போட்டியிடுவதாக அதிமுக அறிவித்தது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!