புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தயாராகும் நட்சத்திர விடுதிகள், ரிசார்ட்டுகள்
பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து செங்கல்பட்டு மாவட்ட காவ கண்காணிப்பாளர் சாய் பிரணீத் ஆலோசனை நடத்தினார்.
மழை வெள்ள பாதிப்பில் இருந்து மீண்டு உள்ள சென்னை மக்கள் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தயாராகி வருகிறார்கள். குறிப்பாக மெரினா கடற்கரை மற்றும் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஓட்டல்கள், ரிசாட்டுகளில் புத்தாண்டு கொண்டாட்டம் களை கட்டும்.
இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் கிழக்கு கடற்ககரை சாலையில் உள்ள நட்சத்திர ஓட்டல்கள், தங்கும் விடுதிகள், ரெஸ்டாரண்டுகள் பண்ணை வீடுகள் புத்தாண்டு கொண்டா ட்டத்துக்கு முழு வீச்சில் தயாராகி வருகின்றன.
இதையொட்டி காவல்துறையினர் பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்து உள்ளனர். புத்தாண்டையொட்டி வருகிற 31-ந்தேதி இரவு சென்னை நகரம் மற்றும் கிழக்கு கடற்கரை சாலை உள்ளிட்ட இடங்களில் 2 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மெரினா, பெசன்ட் நகர், திருவான்மியூர், கிழக்கு கடற்கரை சாலை, கொட்டிவாக்கம், நீலாங்கரை, அக்கரை, உத்தண்டி கோவளம், மாமல்லபுரம், உள்ளிட்ட கடற்கரை பகுதிகள் முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து உள்ளனர்.
பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தேவையான முன்னேற்பாடுகளை மேற்கொள்ள சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் மற்றும் தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் ஆகியோர் உத்தரவிட்டு உள்ளனர்
அதன்படி கடற்கரை பகுதிகளில் ரோந்து பணியை தீவிர படுத்தவும் கடற்கரை பகுதிகளில் தடுப்பு வேலிகளை அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.சென்னை முழுவதும் 500 இடங்களில் வாகன சோதனைகளிலும் ஈடுபடுகிறார்கள். மெரினா காமராசர் சாலை, கிழக்கு கடற்கரை சாலை உள்ளிட்ட பகுதிகளில் கூடுதல் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ளவும் இளைஞர்கள் அதிவேகமாக மோட்டார் சைக்கிள்களில் செல்வதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க உள்ளனர். இதற்காக 25 தனிப்படைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
கடற்கரை பகுதிகளில் மணலிலும் கடலிலும் செல்லும் வகையிலான வாகனங்களில் ரோந்து சென்று கண்காணிக்கவும் திட்டமிடப் பட்டுள்ளது. மெரினா, கிழக்கு கடற்கரை சாலை உள்ளிட்ட கடல் பகுதிகளில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளன. டிரோன் மூலம் கண்காணித்து பாதுகாப்பு பணியில் காவல்துறையினர் ஈடுபட உள்ளனர். 2024-ம் ஆண்டு புத்தாண்டு தினத்தை அமைதியாகவும், மகிழ்சியாகவும் கொண்டாட வேண்டும் என்றும் வேண்டுகோள்வி டுத்து உள்ளனர்.
மாமல்லபுரம் பகுதிகளில் இருக்கும் கடற்கரை ரிசார்ட், ஓட்டல்கள், விடுதிகளின் உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகத்தினருடன் புத்தாண்டு கொண்டாட்ட ஏற்பாடுகளுக்கான கட்டுப்பாடுகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து செங்கல்பட்டு மாவட்ட காவ கண்காணிப்பாளர் சாய் பிரணீத் ஆலோசனை நடத்தினார்.
அப்போது டி.ஜே. என்ற பெயரில் ஆபாச நடனம் நடத்தக்கூடாது, விருந்தினர்களை கடலில் குளிக்க அனுமதிக்க கூடாது, தனியார் பாதுகாப்பு பவுன்சர்கள் என்ற பெயரில் அடாவடி நபர்களை நியமிக்க கூடாது உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டது. அப்போது மாமல்லபுரம் காவல் உதவி கண்காணிப்பாளர் ஜெகதீஸ்வரன் உடன் இருந்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu