சித்தாமூர் ஒன்றியம் 10 வது வார்டில் 7 முனைப் போட்டி

சித்தாமூர் ஒன்றியம் 10 வது வார்டில் 7 முனைப் போட்டி
X

ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் லதா

செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் ஊராட்சி ஒன்றியத்தில் 10வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 7 முனைப் போட்டி நிலவுகிறது.

செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் ஊராட்சி ஒன்றியத்தில் 9ம் தேதி ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இதில் 10வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு அதிமுக சார்பில் லதா, திமுக சார்பில் இனியமதி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அஞ்சலை, சுயேட்சை வேட்பாளர்களாக வளர்மதி, பிரியங்கா, ஆதிலட்சுமி, பரிமளா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

10 வது வார்டில் அதிமுக, திமுக, நாம் தமிழர் கட்சி நேரடியாக மோதிக்கொள்வதால் அனல் பறக்கும் பிரசாரம் நடைபெறுகிறது .

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!