கல்குவாரி லாரி மோதியதில் பெண் பலி
சாலை மறியலில் ஈடுபட்ட மக்கள்
செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அடுத்த மேற்கு செய்யூர் இப்பகுதியை சேர்ந்த மணி என்பவரின் மனைவி லட்சுமி. இவருக்கு திருமணமாகி 2 மகன், ஒரு மகள் உள்ளனர்.
லட்சுமிக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால், அவரது மகன் கௌதம் அவரை தனது இருசக்கர வாகனத்தில் ஏற்றிக் கொண்டு மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது பெரிய வெண்மணி பகுதியில் இவர்களுக்கு பின்னால் வந்து கொண்டிருந்த கிரசர் மணல் ஏற்றிக்கொண்டு வந்த லாரி, இருசக்கர வாகனத்தின் மீது பலமாக மோதியது.
இதில் இரு சக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து கொண்டு இருந்த லட்சுமி சாலையில் தவறி விழுந்தார். லாரி அவரது உடல் மீது ஏறியதில் சம்பவ இடத்திலேயே லட்சுமி உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனை அறிந்த அப்பகுதி மக்கள் ஆத்திரமடைந்து லாரியை நிறுத்தி கண்ணாடியை அடித்து நொறுக்கி, லாரி ஓட்டுநரான உத்தமனை சரமாரியாக தாக்கி, செய்யூர் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
தொடர்ந்து இறந்த பெண்ணின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க கோரி, நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் இறந்தவரின் உடலுடன் செய்யூர் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இச்சம்பவம் குறித்து அங்குவந்த மதுராந்தகம் டிஎஸ்பி கவினா பேச்சுவார்த்தை நடத்தினர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் 2 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu