உயர் மின்கம்பம் அமைப்பதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் சாலை மறியல்

உயர் மின்கம்பம் அமைப்பதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் சாலை மறியல்
X

சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.

புதிதாக அமைய உள்ள தார் தொழிற்சாலை மற்றும் கல் குவாரி அமைப்பதற்கு உயர் மின் கம்பம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் சாலை மறியல்.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த பவுஞ்சூர் அருகே சிறுவங்குனம் பகுதியில் புதிதாக தார் தொழிற்சாலை மற்றும் கல்குவாரி அமைகைப்பட உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தொழிற்சாலைக்கு மின்சாரத் துறை சார்பாக 11Kv உயர் மின்சாரம் எடுத்துச் செல்வதற்காக கடுகுப்பட்டு ஆக்கினாம்பட்டு கிராம குடியிருப்பு பகுதிகளின் வழியாக புதிய மின் கம்பம் நடப்பட்டு வருகிறது. இதனை கண்டித்தும், மின்கம்பம் நட வந்த ஜேசிபி இயந்திரத்தை சிறைபிடித்து அப்பகுதி மக்கள் 200க்கும் மேற்பட்டோர் மதுராந்தகம் கூவத்தூர் செல்லும் சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் . இதனால் அப்பகுதியில் சுமார் 2 மணி நேரத்திற்க்கு மேலாக பரபரப்பு நிலவியது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!