திரிபுரசுந்தரி உடனுறை தான்தோன்றீஸ்வரர் ஆலய மஹா கும்பாபிஷேகம்
செங்கல்பட்டு வளாகம் கிராமத்தில் நடந்த கோயில் கும்பாபிஷேக விழா
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் வட்டம் விளாகம் கிராமத்தில் சுமார் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு திரிபுரசுந்தரி உடனுறை அருள்மிகு தான் தோன்றீஸ்வரர் திருக்கோவில் உள்ளது. பிரகார மண்டபத்துடன் கோவிலை விரிவாக்கம் செய்து புதுப்பிக்கும் பணிகளை தொடங்கினார். ஆனால் 17 ஆண்டுகளாக கோவில் புனரமைப்பு பணிகள் நடைபெறாமல் கோவிலின் எதிரே சிறுகொட்டகையினுள் சுவாமிக்கு வழிபாடு மற்றும் பூஜைகள் நடைபெற்று வந்தது. விளாக கிராம மக்களிடையே கோவில் புனரமைப்பு பணிகள் நடைபெறாமல் இருப்பதை கண்டு மனவருத்தத்தில் இருந்தனர்.
இந்நிலையில் திருக்கோவில் வழிபாட்டு குழுவினர் மற்றும் இந்து முன்னணியினர் முயற்சியால் கிராம மக்கள் வேண்டு கோளையேற்று காஞ்சி ஸ்ரீ சங்கர மடம் நிர்வாகத்தின் சார்பில் குரோம்பேட்டை கண்ணன் ஜீ விளாக, கிராமத்தில் 17 ஆண்டுகளாக பணிகள் நிறைவடையாமல் இருந்த கோவிலை நேரில் பார்வையிட்டு கடந்த ஜூலை மாதம் ஸ்ரீசங்கர மடம் சார்பில் கிராம மக்கள் உபயத்துடன் கோவில் புனரமைப்பு பணிகள் துவங்கின.
சுமார் 5 மாதங்களுக்கும் மேலாக நடைபெற்று வந்த புனரமைப்பு பணிகள் முடிவடைந்த நிலையில் கோவில் கும்பாபிஷேகம் நடத்திட முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து கடந்த 10 ஆம் தேதி மாலை குரோம்பேட்டை கண்ணன் ஜீ மற்றும் திருக்கோவில் வழிபாட்டு குழுவினர் தலைமையில் கும்பாபிஷேகத்திற்கான பூர்வாங்க பூஜைகள் துவங்கின.
7பிரதான கலசம் மற்றும் 508 துணை கலசங்களுடன் 7 யாக குண்டங்கள் மற்றும் கரி கோலம் அமைக்கப்பட்டு அனுக்ஞை விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது. 11 ஆம் தேதி மாலை பூர்வாங்க பூஜைகளுடன் லட்சுமி ஹோமம் நவகிரக ஹோமம் என பல்வேறு வேள்விகளுடன் கடந்த 3 நாட்களாக 4 கால யாகசாலை பூஜைகள் முடிவடைந்து மஹா பூர்ணாஹூதியுடன் நேற்று காலை கலச பூஜை நடைப்பெற்றது.
அதனைத் தொடர்ந்து கலச புறப்பாட்டுடன காலை 9.30 மணி முதல்10.30 மணிக்குள்ளாக குரோம்பேட்டை கண்ணன் ஜீ தலைமையில் கிராம பொதுமக்கள் மற்றும் திருக்கோவில் வழிபாட்டு குழுவினர் முன்னிலையில் கோவில் கோபுர விமானத்திற்கும், மூலவ மூர்த்திகளான தான் தோன்றீஸ்வரர் சுவாமி மற்றும் திரிபுர சுந்தரி அம்பாள் , பரிவார மூர்த்திகளுக்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
பக்தர்கள் மீது கலசநீர் தெளிக்கப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. இந்து முன்னணியின் காஞ்சி கோட்ட செயலாளர் ஆர்.டி.மணி, ஸ்தபதி ஏழுமலை உள்பட பலர் கலந்துக் கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu