இடிதாக்கி குடிசை வீடு எரிந்து சேதம்: உதவிகளை வழங்கிய வட்டார வளர்ச்சி அலுவலர்

இடிதாக்கி குடிசை வீடு எரிந்து சேதம்: உதவிகளை வழங்கிய வட்டார வளர்ச்சி அலுவலர்
X

செங்கல்பட்டு அருகே இடி, மின்னல் தாக்கி எரிந்து சேதமடைந்த குடிசை வீடு.

செங்கல்பட்டு மாவட்டம் விளாங்காட்டில் இடிதாக்கி குடிசை வீடு எரிந்து சேதமடைந்தது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் நிவாரண உதவிகளை வழங்கினார்.

சித்தாமூர் அருகே உள்ள விளாங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் துலுக்காணம் வயது.70 மாரியம்மாள் தம்பதியினர். இவர் நேற்றிரவு தனது குடிசை வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென இடி தாக்கியதில் குடிசை வீடு தீ பிடித்து முழுமையாக எரிந்து நாசமானது.

வீட்டில் இருந்த சுமார் ஒரு லட்ச ரூபாய் மதிப்புடைய பணம் நகை மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் எரிந்து சேதமானது.வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த 6 பேர் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர்.

மேலும் தகவலின் பேரில் அங்கு வந்த சித்தாமூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சு.பரணி பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு இன்று தேவையான உதவிகளை வழங்கினார்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!