நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகளுக்கு உதவிகள், வழங்கிய சமூக ஆர்வலர்

நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகளுக்கு உதவிகள், வழங்கிய சமூக ஆர்வலர்
X

செங்கல்பட்டு மாவட்டத்தில் நீட் தேர்வில் கடந்த ஆண்டு வெற்றிப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சமூக ஆர்வலர் உதவிகளை வழங்கினார்.

நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளின் இல்லம் தேடி சென்று சமூக ஆர்வலர் உதவிகளை வழங்கினார்.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த கோட்டைகயப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த சமூக சேவகர் ஜெயராமன் மகாதேவன், நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகளுக்கு உதவிகள் வழங்கினார்.

கடந்த ஆண்டு நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவம் பயின்றுவரும் மாணவிகள் கீர்த்தனா, பாரதி, மாணவன் டில்லிபாபு, ஆகியோரின் இல்லம் சென்று கோட்டைகயப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த சமூக சேவகர் ஜெ.மகாதேவன் என்ற இன்ஜினியர் மார்வார் அரசினர் மேல்நிலைப்பள்ளியின் முன்னால் மாணவர் என்ற முறையிலும் அந்த பள்ளியில் படித்து மருத்துவம் பயிலும் மாணவ மாணவிகளுக்கு தலா ரூபாய் -10000,வீதம் கொடுத்து மகிழ்ந்தார்.

அத்துடன் இனிவரும் 4 ஆண்டு காலம் மருத்துவ படிப்பு முடியும் வரை புத்தகங்கங்கள் மற்றும் படிப்பு சம்மந்தமான மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்கு உதவுவதாக வாக்குறுதி கொடுத்தார்.

மாணவர்களை உற்சாக படுத்தி பாராட்டி பேசினார். இந்த சந்திப்பில் நீட் கல்வி வட்டார வளர்ச்சி ஒருகிணைப்பபாளர் ஆசிரியர் தணிகைவேல் மற்றும் கோட்டைகயப்பாக்கம் ஜி.அன்பழகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil