எடப்பாடிக்கு அதிமுகவினர் சிறப்பான வரவேற்பு

எடப்பாடிக்கு அதிமுகவினர் சிறப்பான வரவேற்பு
X

இடைக்கழிநாடு பேரூராட்சி தலைவராக பொறுப்பேற்றுள்ள சமியுக்தா எடப்பாடி பழனிச்சாமி பூங்கொடுத்து வரவேற்றார்.

கடலூரிலிருந்து சென்னை செல்லும் வழியில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிமுகவினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக அணி இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமி கடலூரில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்னை சென்று கொண்டிருந்தார். அப்போது இடைக்கழிநாடு பேரூராட்சியில் புதிதாக பேரூராட்சி தலைவராக பொறுப்பேற்றுள்ள சமியுக்தாவை மாவட்ட செயலாளர் எஸ் ஆறுமுகம் அறிமுகம் செய்து வைத்தார்.

அப்போது பேரூராட்சி தலைவர் சம்யுக்தா பொறுப்பு ஏற்றதற்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து பெற்றார். தொடர்ந்து ஒன்றிய செயலாளர்கள் வழி நெடுகிலும் சிறப்பான வரவேற்பளித்தனர். இந்த நிகழ்ச்சியில் சித்தாமூர் ஒன்றிய செயலாளர் டாக்டர் பிரவீன் குமார், இடைக்கழிநாடு பேரூராட்சி செயலாளர் ஆறுமுகம் உள்ளிட்ட ஏராளமான அதிமுகவினர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா