/* */

செய்யூர்: கடப்பாக்கம் பகுதியில் மீனவர் வெட்டி படுகொலை

செய்யூர் அருகே உள்ள கடப்பாக்கம் பகுதியில் மீனவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

HIGHLIGHTS

செய்யூர்: கடப்பாக்கம் பகுதியில் மீனவர் வெட்டி படுகொலை
X

கொலை செய்யப்பட்ட ரமேஷ்.

செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் அடுத்த கடப்பாக்கம் பகுதியில் உள்ள இடைக்கழிநாடு பேரூராட்சி அலுவலகம் உள்ளது. அதன் பின்புறம், சென்னை காசிமேடு பகுதியைச் சேர்ந்த மீனவர் ரமேஷ் என்பவரை, மர்ம நபர்கள் வெட்டி படுகொலை செய்துள்ளனர்.

ரமேஷ் மீது சென்னையில் கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. இவர் தற்போது கொலை வழக்கு ஒன்றில் சிறையில் அடைக்கப்பட்டு, சில தினங்களுக்கு முன்பு ஜாமினில் வெளி வந்துள்ளார். பின்னர், கடப்பாக்கம் பகுதியில் தனது உறவினர் வீட்டில் தங்கி இருந்து தினந்தோறும் காவல் நிலையத்தில் கையெப்பமிட்டு வந்துள்ளார்.

இன்று கையொப்பம் இடுவதற்காக, அதிகாலை 5 மணியளவில் சென்னை செல்வதற்காக கடப்பாக்கம் பேருந்து நிலையத்தில் ரமேஷ் நின்று கொண்டிருந்துள்ளார். அப்போது அவரை நோட்டமிட்டு, அங்கு வந்த மர்ம நபர்கள், அவரை சரமாரியாக கை, கால்கள், தலையில் வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி சென்றுள்ளனர்.

தகவலின் பேரில் அங்கு வந்த சூனாம்பேடு போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தப்பி ஓடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Updated On: 11 Sep 2021 5:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஒட்டிய உறவாக வந்த உடன்பிறந்தோர் தின வாழ்த்துகள்..!
  2. வீடியோ
    SavukkuShankar-ரை அவமதித்த பெண் காவலர்கள் !#seeman #seemanism...
  3. வீடியோ
    Vetrimaaran சாதி இயக்குனர் Seeman சொன்ன பதில் !#seeman #seemanism...
  4. லைஃப்ஸ்டைல்
    பிறந்தநாளை கொண்டாடுவோம் வாங்க..!
  5. நாமக்கல்
    வெளிநாடுகளில் நர்சிங் வேலைக்கு செல்பவர்கள், அந்நிய மொழி பயிற்சி பெற...
  6. நாமக்கல்
    போதமலைக்கு ரூ. 19.57 கோடி மதிப்பில் புதிய சாலை அமைக்கும் பணி :...
  7. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான உடல் திடத்தைப் பெற இத ஃபாலோ பண்ணுங்க..!
  8. ஆன்மீகம்
    பரசுராம் ஜெயந்தி 2024 - நாள், நேரம், சிறப்புகள் என்னென்ன தெரியுமா?
  9. ஈரோடு
    ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியர் ஆய்வு
  10. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே ,தென்கரை உச்சி மாகாளியம்மன் ஆலய விழா..!