கொரோனாவுக்கு செய்யூர் அ.தி.மு.க. முன்னாள் எம்எல்ஏ ராஜி பலி!

கொரோனாவுக்கு  செய்யூர் அ.தி.மு.க. முன்னாள் எம்எல்ஏ ராஜி பலி!
X
செய்யூர் முன்னாள் எம்எல்ஏ ராஜி
கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த செய்யூர் தொகுதி அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ ராஜி உயிரிழந்தார்.

செய்யூர் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. முன்னாள் எம.எல்ஏவும், அ.தி.மு.க. இலத்தூர் மேற்கு ஒன்றிய செயலாளருமான முன்னோடி பிரமுகர்களில் ஒருவருமான ராஜி, கொரோனா தொற்று காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 63.

கடந்த சில நாட்களாக ராஜி, உடல் நலக்குறைவு ஏற்பட்டு அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது.

அங்கு தீவிர சிகிச்சைக்கு மாற்றப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி தற்போது அவர் உயிரிழந்தார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!